செய்திகள் :

”முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க...” - அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சிப் பதிவு

post image
`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது பேச்சுத் திறமையால் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தனுஷின் `மாரி 2' படம் மூலம் அறந்தாங்கி நிஷா சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்ற இவர் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் சொந்த வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ள அறந்தாங்கி நிஷா, ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் ”உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு .வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது, சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்தா கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க, திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா,அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்,ஆறு மாசமா சென்னையில வீடு தேடுனப்போ ஆர்டிஸ்ட் வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து.

இப்போ வீடு வாங்கியாச்சு,எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும்,என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி”, என்று நெகிழ்ந்திருந்தார் அறந்தாங்கி நிஷா.

தைப்பூசம்: தினமும் இரவு வடபழனி முருகன் கோவிலில் பூஜை; வீட்டிலிருந்தே பால்குடம்; நெகிழும் நடிகை தீபா

நாளை தைப்பூசத்திருநாள். முருகன் ஞானப்பழத்திற்காக அவரது பெற்றோருடன்கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறிய நாளே இந்தநாள் என்று ஒரு சாராரும், அசுரர்களை வெல்வதற்காக முருகன் அவரது அன்னையிடமிருந்து ஞான வ... மேலும் பார்க்க

`18வது ஃப்ளோர்; எனக்கு அவளும், அவளுக்கு நானும் கொடுத்த ஒரே கிஃப்ட்’ - அருண், திவ்யாவின் லவ்வர்ஸ் டே!

இன்னும் நான்கே நாட்களில் களை கட்ட இருக்கிறது காதலர் தினம்.'உனக்கு கிப்ஃட் நான்; எனக்கு கிடைச்ச பரிசு நீ' என்ற மொக்கை டயலாக்கைஎடுத்து விட்டால், இப்போதெல்லாம்., காதலர் தினம் காதலர் தினமாக இருக்காதென்பதா... மேலும் பார்க்க

Siragadikka aasai : முத்துவிடம் சிக்கும் மலேசியா மாமா... ரோகிணிக்கு புதிய சிக்கல்!

Siragadikka aasaiசிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை முத்து பார்த்துவிடுகிறார். மலேசியா மாமாவாக மணி அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு வருகிறார்.கடந்த வார எபிசோடுகளில் மீனாவின் ... மேலும் பார்க்க

`அன்று தோத்துப்போன பிசினஸ்மேன்; இப்ப முதல் விருது..!’ - நெகிழும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சீரியல்களில் நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விருதை வாங்கியிருக்கிரார்நடிகர் ரவிச்சந்திரன். அவரிடம் வாழ்த்துச் சொல்லிப்பேசினோம்.''சொந்த ஊர் கும்பகோணம். அப்பா, தாத்தான்னு எந்தத் தலைமுறையிலயு... மேலும் பார்க்க

Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை அறிவித்த ஸ்ரித்திகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `மெளனராகம் 2'வில் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்சல்மானுள்ஃபாரிஸ் (Salmanul Faris). ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிழிஇரண்டிலும் (Mizhirandilum) தொடரில் சஞ்சய்... மேலும் பார்க்க