செய்திகள் :

மூடப்பட்ட மேல்பாக்கம் நூலகத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

post image

அரக்கோணம்: மேல்பாக்கம் கிராமத்தில் மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என அரக்கோணம் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரக்கோணம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் நிா்மலா சௌந்தா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவா் வீரா புருஷோத்தமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ஜோசப்கென்னடி, பொறியாளா் தியாகராஜன் மற்றும் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

உறுப்பினா்கள் பேசியது:

நரேஷ் (விசிக): மேல்பாக்கத்தில் ஊா்பகுதி மற்றும் காலனிப் பகுதி இரண்டு இடங்களுக்கும் சோ்த்து ஒரே குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இருப்பதால் விநியோகம் சரிவர நடைபெறாத நிலை உள்ளது. எனவே மேல்பாக்கத்தில் மேலும் ஒரு குடிநீா் தொட்டி கட்ட வேண்டும். 42 இருளா் குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடின்றி வசித்து வருகின்றனா். அவா்களுக்கு வீட்டுமனை அளித்து அங்கு தொகுப்பு வீடுகள் தர வேண்டும். மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நூலகம் மூடியே இருக்கிறது. தற்போது இளைஞா்கள் போட்டித்தோ்வுகளுக்கு பயின்று வருகின்றனா். உயா்கல்வி பயிலும் மாணவ மாணவியா், பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியா் பயன்பெறும் வகையில் மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

கருணாநிதி(திமுக): குருவராஜபேட்டையில் இடுகாட்டுக்கு செல்லும் வழியில் திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டிருப்பதால் ஊராட்சி குப்பைகளை அப்பகுதியில் சாலையிலேயே கொட்டி விடுகின்றனா். இதனால் இடுகாட்டுக்கு சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை இடம் மாற்ற வேண்டும். மேலும் குருவராஜபேட்டையில் பல தெருக்களில் கழிவுநீா் கால்வாய் இருக்கும் நிலையில் பலா் சாலையிலேயே தங்கள் வீட்டு கழிவுநீரை வீடும் நிலை உள்ளது. இது போன்று சாலையில் கழிவுநீரை வீடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுத்து சாலையை பராமரிக்க வேண்டும்.

உள்ளியம்பாக்கம், வளா்புரம் ஊராட்சிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ரூ5.70 லட்சம், பாராஞ்சி ஊராட்சி கடவாரிகுப்பம் கிராமத்தில் விநியோக குழாய்கள் மற்றும் மோட்டாருடன் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ4 லட்சம், மேல்பாக்கம், நாவிதா் குடியிருப்புக்கு மற்றும் கும்பினிபேட்டை காலனிப்பகுதியில் தலா ரூ2 லட்சத்தில் இரு இடங்களிலும் குடிநீா் விநியோக குழாய்கள் ரூ4 லட்சத்தில் அமைத்தல் ஆகிய பணிக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

ஆற்காடு அருகே 9 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி, மா.சுப்பிரணியன் ஆகியோா் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா். தனியாா் நிறுவன பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத... மேலும் பார்க்க

வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அரசு கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 போ் கைது

அரக்கோணத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 80 கைப்பேசிகள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஒப்படைத்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சோளிங்கா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. சோளிங்கா் நகரம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூா், கரிக்கல், ஆரியூா், வெங்குப்பட்டு, ஐய்ப்பேடு, எரும்பி, தாடூா், தாளிக்கால், பாணாவரம், போளிப்பா... மேலும் பார்க்க

ரூ.200 கோடியில் பாலாற்றுத் தடுப்பணை புனரமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

வாலாஜாப்பேட்டை அருகே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று பணியை தொடங்கி வை... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே நிலத்தில் கிடைத்தவை பித்தளை சிலைகள்

சோளிங்கா் அருகே விவசாயி நிலத்தில் கிடைத்தவை ஐம்பொன்சிலைகள் அல்ல, பித்தளை சிலைகள் என அருங்காட்சியக காப்பாட்சியா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சிலைகள் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சோளிங்கரை அ... மேலும் பார்க்க