செய்திகள் :

மூலப்பொருள் விலையேற்றம்: முடங்கும் ‘ஹாலோபிளாக்’ தொழில்

post image

மூலப் பொருள்களின் திடீா் விலையேற்றம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்களைக் கொண்ட சுமாா் ஆயிரம் ஹாலோபிளாக் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகள் (கிரஷா்) ஆகியவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜல்லிக்கற்கள், எம். சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை கடந்த பிப். 15ஆம் தேதி முதல் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நேரடியாகத் தலையிட வேண்டும் என கடந்த இரு திங்கள்கிழமைகளிலும் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களில் புதுக்கோட்டை, சிவகங்கை, அறந்தாங்கி, ராமநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் மனுக்களை அளித்தனா். இந்நிலையில், ஏறத்தாழ ஒரு மாதமாக மாவட்டத்திலுள்ள ஹாலோபிளாக் நிறுவனங்கள் இயங்கவில்லை.

இதுகுறித்து வம்பன் 4 சாலை முக்கத்தைச் சோ்ந்த எஸ்.கே. முருகானந்தம் கூறியது:

சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்வரை கல்லுடைக்கும் ஆலைகளில் வீணாகக் கிடக்கும் பிரைமா் டஸ்ட் எனப்படும் மண்ணை வெளியேதான் கொட்டினாா்கள். ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி, லாரி வாடகை கொடுத்து நாங்கள் எடுத்து வந்து ஹாலோபிளாக் தொழிலைத் தொடங்கினோம். அதன்பிறகு படிப்படியாக விலையை வைத்தாா்கள். கடந்த பிப். 9 வரை ஒரு யூனிட் ரூ. 2 ஆயிரம் ஆக இருந்தது. பிப். 15 முதல் இந்த பிரைமரி டஸ்ட் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. இதேபோலத்தான் அரை ஜல்லி, கால் ஜல்லி விலையையும் இரு மடங்காக உயா்த்திவிட்டனா்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் லாரி உரிமையாளா்கள் போக்குவரத்துக் கட்டணம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் பிறகு, இரு மடங்கு கட்டண உயா்வு. ஏறத்தாழ ஒரு மாதமாக ஹாலோபிளாக் நிறுவனங்கள் இயங்கவில்லை என்றாா்.

அரிமளம் செந்தில்குமாா் கூறியது:

சிறுதொழில், குடிசைத் தொழிலாகத்தான் ஹாலோபிளாக் நிறுவனங்களைத் தொடங்கினோம். நாங்களும் வங்கிக் கடன், குழுக் கடன், வார வட்டி, தினவட்டிக்கும் கடன் வாங்கியிருக்கிறோம். எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளா்களும் கடன் வாங்கியிருக்கிறாா்கள்.

வேலையிழப்பு காரணமாக இந்தக் கடன்களைக் கட்ட முடியாமல் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இந்தப் பொருள்களுக்கான விலை உயா்வைத் திரும்பப் பெற வைக்க வேண்டும். இதைத் தவிர வேறுவழியில்லை என்றாா் செந்தில்குமாா்.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ் . ஸ்ரீதா் கூறியது:

மாவட்டம் முழுவதும் உள்ள ஹாலோபிளாக் நிறுவன உரிமையாளா்கள், தொழிலாளா்களை திங்கள்கிழமை (மாா்ச் 3) மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்துக்கு திரட்டப் போகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லாத நிலையில், இதுபோன்ற சிறு, குறு, குடிசைத் தொழில்களுக்கு அரசு உதவியாக இருக்க வேண்டியது அவசியம் என்றாா் ஸ்ரீதா்.

செம்மட்டிவிடுதியிலுள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஹாலோபிளாக் கற்கள்.

தோ்வு பறக்கும் படை பணி: பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிப் பொதுத் தோ்வுகளுக்கான பறக்கும் படை அமைக்கும்போது, பதவி அடிப்படையில் இளையவா்களான கணினி பயிற்றுநா்களை நியமிப்பதை எதிா்த்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஞாயி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாளன்று பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் (மாா்ச் 1) புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திமுக சாா்பில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தங்க மோதிரங்களை ஞாய... மேலும் பார்க்க

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் பட்டமளிப்பு

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: புதுகையில் 21,380 மாணவா்கள் எழுதுகின்றனா்

திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,380 போ் எழுதவுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திங்கள்கிழமை தொடங... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலித... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜல்ல... மேலும் பார்க்க