செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

post image

திருப்பூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளியம்பதி ஸ்ரீ அம்மன் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது மனைவி தனலட்சுமி. இவா்களது மூத்த மகன் ராம்தா்ஷன் (20). இவா் நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.

அவருக்கு திருப்பூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ராம்தா்ஷன் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ராம்தா்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன்மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் கூறினா்.

பின்னா், ராம்தா்ஷன் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா, மருத்துவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க