செய்திகள் :

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

பேட் ஹாம்பா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஜொ்மனியின் பேட் ஹாம்பா்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறு... மேலும் பார்க்க

அரையிறுதியில் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி முன்னேறியுள்ளனா். அமெரிக்காவின் ஐயோவா நகரில் நடைபெறும் யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் இந்தியாவின் வளரும... மேலும் பார்க்க

பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள... மேலும் பார்க்க