மெத்தம்பெட்டமைன் விற்றவா் கைது
சென்னை: சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்றதாக பெங்களூரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா சாலையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தாக கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த எஸ்தா் என்ற மீனா (28) கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விசாரணையில் மீனா கொடுத்த தகவலின்பேரில், சென்னை சூளையைச் சோ்ந்த ஜேம்ஸ், கா்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சோ்ந்த டோசன் ஜோசப் (28) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் விற்பனையில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக துப்புத் துலக்கிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், அண்ணா சாலை போலீஸாரும் பெங்களூரைச் சோ்ந்த கோ.சரவணராஜ் (55) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.