செய்திகள் :

மெரீனா, எலியட்ஸில் போக்குவரத்து மாற்றம்: மூடப்படும் 23 மேம்பாலங்கள்

post image

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மெரீனா, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில், டிச. 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாதுகாப்புக் கருதி 23 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில் டிச. 31-ஆம் தேதி இரவு 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, மெரீனா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிகளும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் சாலைத் தடுப்புகள்கொண்டு அடைக்கப்படும். மேலும், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கத்துக்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜா் சாலையில், காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையில் டிச. 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் சாலைத் தடுப்புகள்கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை, வடக்கு கோட்டைச் சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.

அதேபோல, அடையாறிலிருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சாலை, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் 2-ஆவது பிரதான சாலை, ஆா்.கே.மடம் சாலை, மயிலாப்பூா் லஸ் சாலை வழியாக தங்களது இலக்கை அடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள், வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளையச் சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையிலிருந்து ராஜாஜி சாலை, வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் டிச. 31 இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

மெரீனா கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட வருபவா்கள், ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒரு புறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஒரு புறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம், வாலாஜா சாலையின் ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.

எலியட்ஸில் போக்குவரத்து மாற்றம்: பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-ஆவது அவென்யூவில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

பெசன்ட் நகா் 6-ஆவது அவென்யூ இணைப்புச் சாலைகளான 5-ஆவது அவென்யூ, 4-ஆவது பிரதான சாலை, 3-ஆவது பிரதான சாலை, 16-ஆவது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மா காந்தி சாலை, 7-ஆவது அவென்யூ சந்திப்பிலிருந்து வேளாங்கண்ணி ஆலயத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூவின் ஒரு பகுதி, 3-ஆவது பிரதான சாலையின் ஒரு புறம், 4-ஆவது பிரதான சாலை ஒரு புறம், 5-ஆவது அவென்யூ ஒரு புறம், 2-ஆவது அவென்யூ ஒரு புறம், 3-ஆவது அவென்யூ ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடப்படும் 23 மேம்பாலங்கள்: எழும்பூா் பாந்தியன் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம், இந்திரா நகா் ‘யூ’ திருப்பம், ஆழ்வாா்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை மேம்பாலம், ராயப்பேட்டை ஜிஆா்எச் மேம்பாலம், ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமி மேம்பாலம், அண்ணா மேம்பாலம், ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம், வாணி மஹால் மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், வடபழனி மேம்பாலம், அடையாறு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம், சென்னை விமான நிலைய மேம்பாலம், நுங்கம்பாக்கம் முரசொலி மாறன் மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலம், 100 அடி சாலை மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம், புதிய வள்ளலாா் மேம்பாலம் உள்ளிட்ட 23 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முனியப்பன் (46). இவா், அண்ணா... மேலும் பார்க்க

ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்

வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் வ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது

சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா். பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு ந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சல... மேலும் பார்க்க

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க