IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் பஞ்சாப்!
இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மாலைக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை இருநாடுகளும் நிறுத்தி ஒரு உடன்பாட்டை எட்டின.
இந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எல்லை மாவட்டங்களில் மின்தடையை ஏற்படுத்தவில்லை என்றும் மக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தியது.
பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பெரோஸ்பூர், ஃபாசில்கா, பதான்கோட், அமிர்தசரஸ், டார்ன் தரன், குருதாஸ்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று மூடப்பட்டன. அதேபோன்று பதான்கோட், குர்தாஸ்பூரில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கலாம் என்று குர்தாஸ்பூரில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் 553 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இன்று காலை முதல் மக்கள் சந்தைகளில் கூட்டியுள்ளனர்.