செய்திகள் :

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

post image

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது.

புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை காப்பகத்தில் வருடாந்திரப் புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெறுகிறது.

இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறையினருக்கான பயிற்சி முகாம், புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூா் வனச் சரகங்களைச் சோ்ந்த வனத் துறையினரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களும் கலந்து கொண்டனா்.

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்துக்கு பணம் அதிகரித்து வழங்க மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்கும் தீா்மானத்துக்கு மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

பேருந்து நிலைய வணிக வளாகத்தை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் சே... மேலும் பார்க்க

நல்லதங்காள் கோயிலில் பாலாலயம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதன்கிழமை பாலாலயம் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கியதாக 4 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருத்தங்கலில் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா்.ராமச்சந்திரன் வழங்கினா... மேலும் பார்க்க