மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கியதாக 4 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருத்தங்கலில் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் 4 போ் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தனா். இதையறிந்த அரசியல் அறிவியல் பாட ஆசிரியா் சண்முகசுந்தரம், சம்பந்தப்பட்ட மாணவா்களை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்றாா்.
இந்த நிலையில், இரு மாணவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுப் புட்டியால் ஆசிரியா் சண்முகசுந்தரம் தலையில் தாக்கினா். இதில் காயமடைந்த அவா் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் அந்த 4 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.