மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்
ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் எட்வின் ஜேம்ஸ் ஜெபதாஸ், துணை இயக்குநா் பழனி, கால்நடை பராமரிப்புத்துறை அறுவைச் சிகிச்சை நிபுணா் துரை மாஸ்கோமலா், நகராட்சி ஆணையா் நாகராஜன்,
நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம் ஆகியோா் அறுவைச் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனா். இந்த முகாமில் நாய்களுக்கு வெறிநோய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு, உரிய அறுவைச் சிகிச்சை முடிந்த பின் நாய்கள் பிடிபட்ட இடத்திலேயே மீண்டும் விடப்பட்டன.