தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை(மே 23) வினாடிக்கு 9,347 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறையத் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,606 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 9,347 கன அடியாக குறைந்துள்ளது.
அழிந்துவரும் 37 பறவை இனங்கள்: தமிழக அரசு தகவல்
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை காலை 110.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 111.25 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 80.19 டிஎம்சியாக உள்ளது.