தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கன அடி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.
இன்று(ஜூலை 7) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22, 200 கன அடி வீதமும், உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 17,800 கன அடி வீதமும் மொத்தமாக 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 40,000 கன அடி நீர். வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்சியாக உள்ளது.
The amount of water entering the Mettur Dam is 40,500 cubic feet per second.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?