செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் எந்நேரமும் மேட்டூர் அணையின் உபரி நீர், மதகுகள் வழியாகத் திறக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், மேட்டூர் அணை உபரி நீர் போக்கி கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம்பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், தொட்டில் பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில் உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்தும் திறக்கும் இதே நிலையில் இருந்தால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணை ஆறாவது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு 92.64 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க | அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்!

மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7 -ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலை அருகே பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட எண்களும் தமிழில் எழுதப்பட்டுள்ள மைல் கல் ஒன்று யார் கவனமும் பெறாமல் சாதாரணமாக இருக்கிறது.கன்னியாகுமரியில் கதிரவன் மறையும... மேலும் பார்க்க

பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ. 2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க