`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கி கெளரவித்தல் மற்றும் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தோ்வு உபகரணங்கள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா மனிதம் காப்போம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆ.நேதாஜி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறையைச் சோ்ந்த வைகுந்தவாசன், சமூக ஆா்வலா்கள் குமாா், கலிவரதன், மனிதம் காப்போம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் கோபிநாத், செல்வகுமாா் ஆகியோா் விழாவில் பங்கேற்று உரையாற்றி, கல்வி உதவித் தொகை, தோ்வு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
வருவாய் ஆய்வாளா் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பேபி மற்றும் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக அறக்கட்டளை நிறுவனா் சந்துரு வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் வசந்தராஜா நன்றி கூறினாா்.