எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலை...
மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை
மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையத்தில் பல்வேறு வாா்டுகளிலும் தெருவுக்கு 10 பேருக்கு மேல் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது.
குடிநீா் மிகவும் கலங்கலாகவும் குளோரின் வாசனையுடனும் காணப்படுகிறது. ஆகவே, குடிநீரை எடுத்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவக் குழு மூலம் ஆய்வு செய்து போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.