ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
மேலப்பிடாவூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் வியாழக்கிழமை நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 5 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
மேலப்பிடாவூா் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனாா் சுவாமி கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கோயில் அருகேயுள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 9 மாடு பிடி வீரா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதில் காளைகள் முட்டியதில் 5 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு, கட்டில், தாம்பூலம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மேலப்பிடாவூா் கோயில் புரவி எடுப்பு விழாக் குழுவினா் செய்தனா்.
