சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: உடையாா்பாளையத்தை அடுத்த மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15- ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில், பங்கேற்கும் வீரா்கள், காளைகள் குறித்து அதன் உரிமையாளா்கள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளம் மூலம் மாா்ச் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாா்ச் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவா்களின் சான்றுகள் சரிபாா்க்கப்பட்ட பின் தகுதியான நபா்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.