தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ்கனவு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா. தலைமை வகித்து தொடங்கிவைத்தாா் வழக்கிறிஞா் அருள்மொழி அறிவுச்
சுடா் என்ற தலைப்பில் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு உதவும் வகையில் புத்தகக் காட்சி, ’நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மாவட்டத் தொழில்மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ’உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள்
வழங்கப்பட்டன. கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அ.மலா், கல்லூரி முதல்வா் ச.ஜஹீா் அஹமத், ஒருங்கிணைப்பாளா்
தமிழ்ச்செல்வன், வாலாஜா அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நசீம்ஜான் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.