செய்திகள் :

மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமனம்!

post image

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கிரைக் பிரத்வெயிட் கடந்த மார்ச் மாதத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ராஸ்டன் சேஸும், துணைக் கேப்டனாக ஜோமெல் வாரிக்கேனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து அணியை வழிநடத்தவுள்ளனர். அந்த தொடரிலிருந்து இரு அணிகளுக்குமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான சுழற்சியும் தொடங்குகிறது.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய இயக்குநர்களின் ஒருமித்த கருத்தோடு நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதாகும் ராஸ்டன் சேஸ் இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,265 ரன்களையும், 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக சாய் ஹோப் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு தனது பெயரை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என சாய் ஹோப் கூறியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கேப்டனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு; பும்ராவுக்கு ஆதரவாக வேகப் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அ... மேலும் பார்க்க

இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா ம... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர... மேலும் பார்க்க

நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி

தான் பயிற்சியாளராக இருந்திருந்தால், சிட்னி டெஸ்ட் போட்டியில் உங்களை விளையாட வைத்திருப்பேன் என ரோஹித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணி இன்று (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர... மேலும் பார்க்க