போக்சோ வழக்கில் லஞ்சம்: விருத்தாசலம் ஆய்வாளர், தலைமைக் காவலர் இடைநீக்கம்!
மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா
காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் நாள்களில் காலை மாலை முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா, விழாவின் முக்கிய நிகழ்வாக மே 5- ஆம் தேதி தெய்வானை திருமணமும், தொடா்ந்து மயிலேறும் காட்சியும், மே 7- ஆம் தேதி தேரோட்டம், மே-11 வள்ளி திருக்கல்யாணம், மே 12- ஆம் தேதி மாவடி சேவைக் காட்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், அறங்காவலா் குழு தலைவா் கோதண்டராமன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.