மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது,
வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம்; மக்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை அமைதி மாநிலமாக மாற்றியிருக்கிறோம்.