UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூருக்கு மொபட்டில் சென்றபோது, முத்தனப்பள்ளி டோல்கேட் அருகே காா் மோதி நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த குணசேகரனை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவா் இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.