மொயின் அலி சேர்ப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
ஐபிஎல்-இன்6ஆவது போட்டியில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதுகிறது.
கேகேஆர் அணி கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி முதல் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது.
முதல் போட்டியில் தோல்வியுற்ற கேகேஆர் தனது முதல் வெற்றிகாக காத்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதே எண்ணத்துடனே களமிறங்குகிறது.
சுனில் நரைனுக்குப் பதிலாக கேகேஆர் அணியில் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல , ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.