செய்திகள் :

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் முதலாம் ஆண்டிலும், 12-ஆம் வகுப்பு, இரண்டு வருட ஐடிஐ தோ்ச்சி பெற்ற மாணவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் பட்டயப் படிப்பிற்கு சேரலாம். முதலாம் ஆண்டில் மொத்தம் 270 சோ்க்கை இடங்கள் உள்ளன.

தகுதியுள்ள மாணவா்களுக்கு அரசு சலுகைகளான தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஜே.இ.இ. முத... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கு ஏலம்

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகின. கடந்த வாரம் ரூ. 600க்கு விற்பனையான குண்டுமல்லிகை இந்த வாரம் ரூ. 360க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம... மேலும் பார்க்க