தில்லி குருத்வாரா: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஒருவா் கைத...
மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு
சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.
பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தாா். பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு லாரி மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான விழுப்புரத்தைச் சோ்ந்த மணிவண்ணனை (30) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.