மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ம. க. ஸ்டாலின். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலராகவும் உள்ளார். வெள்ளிக்கிழமை ம. க. ஸ்டாலின் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரரென்று அங்கு வந்த கும்பல் ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
அவர் அலுவலகத்திற்குள் நுழையும் போது வீசியதால் அருகில் இருந்த ஜன்னல்களில் பட்டு கண்ணாடிகள் சிதறின. அலுவலக கதவும் சிதறியது. அதிர்ச்சியடைந்த ம.க. ஸ்டாலின் அலுவலகத்திற்குள் சென்று விட்டார். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ம. க. ஸ்டாலினுடன் சென்ற இளையராஜா, அருண் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் காவல் கோட்ட துணைக்கண்காணிப்பாளர் கே. ராஜூ சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டார். ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
