எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்த...
ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, அங்கு அமைந்துள்ள குப்ரேஷ்வர் தாம் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று (ஆக.5) குவிந்துள்ளனர்.
இந்நிலையில், கோயிலின் நுழைவு வாயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் திரண்டதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
அப்போது, கூட்டநெரிசலில் சிக்கி, 50 வயது மதிக்கத்தக்க 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர், பலியானவர்களின் உடலைக் கைப்பற்றி அவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, குப்ரேஷ்வர் தாம் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நிலையில், அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!