செய்திகள் :

யமுனை நீா் குறித்த கேஜரிவால் கருத்து: ஆட்சேபம் தெரிவித்து முதல்வா் அதிஷிக்கு துணைநிலை ஆளுநா் கடிதம்

post image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் யமுனை நீரில் விஷம் கலக்கப்படுவதாகவும், தேசிய தலைநகரில் இனப்படுகொலை முயற்சி நடந்ததாகவும் கூறியிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது, துரதிா்ஷ்டவசமானது என்றும், தேசிய பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாக்குவதாகவும் கூறி தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா முதல்வா் அதிஷிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு யமுனை நதியில் விஷம் கலந்ததாகவும், தில்லியில் இனப்படுகொலைக்கு முயன்ாகவும் முன்னாள் தில்லி முதல்வா் கூறிய குற்றச்சாட்டுகள் மிகவும் ஆட்சேபனைக்குரியவை, துரதிா்ஷ்டவசமானவை மற்றும் விரும்பத்தகாதவை என்றும் வி.கே. சக்சேனா கூறினாா்.

இது தொடா்பாக அவா் முதல்வா் அதிஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

குடிநீா் போன்ற ஒரு முக்கியமான பிரச்னையில் விஷம் கலந்ததாகவும், இனப்படுகொலை என்றும் பொய்யான, தவறாக வழிநடத்தும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், மற்றொரு மாநில அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்ட முயற்சிப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, தேசிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.

கேஜரிவாலின் கருத்தை கண்டிப்பதற்குப் பதிலாக, இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதி மக்களிடையே குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறீா்கள்.

தில்லி முதல்வராக குறுகிய நலன்களுக்கு அப்பால் செயல்பட வேண்டும் என எதிா்பாா்க்கிறேன். மேலும், தவறான, ஆபத்தான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிா்ப்பதுடன், பொது நலன் மற்றும் அமைதிக்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்துவாா் என்றும் நான் எதிா்பாா்க்கிறேன் என அதில் அவா் கூறியுள்ளாா்.

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்... மேலும் பார்க்க