21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
யானைகள் நடமாட்டம்: வால்பாறை - ஆழியாறு சாலையில் நடந்து செல்ல தடை!
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பாதயாத்திரை பக்தா்கள் நடந்து செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களுக்கு நவமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டன. தற்போது, ஆழியாறு பகுதியிலும் சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மட்டுமே சாலைகளில் நடமாடிய யானைகள் தற்போது பகலிலும் நடமாடத் தொடங்கியுள்ளன.
இதனால், வாகனங்களில் செல்வோருக்கு வனத் துறையினா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். மேலும், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் வாட்டா்பால்ஸ் எஸ்டேட்டில் இருந்து ஆழியாறு வரை நடந்த செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.