செய்திகள் :

``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக நகர செயலாளர்!

post image

மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கிட்டதட்ட ஒரு எம்.எல்.ஏ-வுக்கான தேர்தலை போல சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான சூழலில் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்ற பொறுப்பாளர்களுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன் வாக்களித்து விட்டு செய்த செயல் விமர்சனங்களையும், கிண்டலையும் பெற்றுள்ளது.

மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள்

தேர்தல் மையத்தில் வாக்களித்து விட்டு வெளியே வாக்குச் சீட்டை எடுத்து கொண்டு வந்தவர், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவருக்கும் வாக்கு சீல் வைத்த அந்த சீட்டை காட்டியிருக்கிறார். நடிகர் வடிவேலு நடித்த காமெடியில் வரும் காட்சியை வீரா.கணேசன் செயல் நினைவுப்படுத்தியதாக சொல்கிறார்கள். இதற்காக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீரா.கணேசனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

எந்த தேர்தலாக இருந்தாலும் அதன் கண்ணியம் காக்கப்படணும், ஆனால் ஜனநாயக முறையில் நடைபெற்ற வர்த்தக சங்க தேர்தலை ஆளும் கட்சியை சேர்த அவரே கேலிக்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டுள்ளது பேசு பொருளாகியிருக்கிறது.

இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகளிடம் பேசினோம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வர்த்தக சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2025-2027 ஆம் ஆண்டிற்கான தேர்தல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. வர்த்தக சங்கத் தலைவர் பதவிக்கு திமுக-வின் திருவாரூர் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஆர்.வி.ஆனந்த், மன்னார்குடி நகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.பி.அசோகன் போட்டியிட்டனர்.

ஆர்.வி.ஆனந்த்

ஆர்.வி.ஆனந்த், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு நெருக்கமானவர். ஏ.பி.அசோகன், வீரா.கணேசனின் ஆதரவாளர். இதற்கு முன்பும் ஆர்.வி.ஆனந்த் தலைவராக இருந்ததால் அவருக்கு எதிர்ப்புகளும் இருந்தன. ஜவுளிக்கடை நடத்தி வரும் வீரா.கணேசன் வர்த்தக சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். வீரா.கணேசன், தன் சமூகத்தைச் சேர்ந்த அசோகனுக்கு வாக்களிப்பாரா, அமைச்சர் சமூகத்தை சேர்ந்த ஆர்.வி.ஆனந்துக்கு வாக்களிப்பாரா என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்தது. இந்த நிலையில், நடைபெற்ற வர்த்தக சங்க தேர்தல் பலராலும் கவனிக்கப்பட்டது.

நாம் யாருக்கு வாக்களித்தாலும் ஏதோ ஒன்றை கிளப்பி விடுவார்கள்னு வீரா.கணேசனுக்கும் தெரியும். இதனால் அமைச்சரிடம் சங்கடத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் வீரா.கணேசன், வாக்கு மையத்தில் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிட்ட நபர்களுக்கு வாக்களித்து அந்த சீட்டை பெட்டிக்குள் போட்டார். அதே நேரத்தில் தலைவர் பதவிக்கான சீட்டில் இரண்டு பெயரிலும் வாக்களித்தார். பின்னர் அந்த சீட்டை பெட்டிக்குள் போடாமல் தேர்தல் மையத்திற்கு வெளியே எடுத்து வந்தார்.

ஏ.பி.அசோகன்

அங்கு பலர் திரண்டிருக்க, இங்கே பாருங்கள் நான் இரண்டு பேருக்கும் பொதுவானவன் என சீட்டை காட்டினார். அவருடைய செயல் பலருக்கு அதிர்ச்சியை தந்தன. மேலும் பலரோ, நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியில், முத்துக்காளை உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேனு இருவரிடம் சொல்வார். வடிவேலு கேட்கும் போது உனக்கு நம்பிக்கையில்லைன்னா பாருண்ணேனு சின்னத்தை சொல்லி இரண்டுத்துக்கும் போட்டுட்டேன்னு காட்டுவார். வீரா.கணேசன் செய்த செயல் இந்த ரகம் தான். அது கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது என்றனர்.

இது குறித்து வீரா.கணேசனிடம் பேசினோம், அவர் கூறுகையில், "இரண்டு பேரும் என்னோட கட்சிக்காரர்கள். அவர்களுடன் காலம் பூரா சேர்ந்து நான் பணியாற்றணும், வேலை வாங்கணும். நான் ஒரு சைடான ஆள்னு யாரும் என்னை நினைச்சிடக்கூடாது. தேர்தல் முடிந்த பிறகான ரியாக்‌ஷனில் நான் மாட்டிக்கொள்ளக் கூடாது. நான் நடுநிலையான ஆள் என்பதை காட்டுவதற்காக அப்படி செய்தேன். இந்த தேர்தலில் எனக்கு உடன்பாடியில்லை. வர்த்தக சங்கத்திற்கு காம்பரமைஸாகத்தான் காலம் காலமாக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வந்தனர்.

வர்த்தக சங்க தேர்தலில் வாக்களித்த சீட்டை காட்டும் வீரா.கணேசன்

ஆனால் இது போல் தேர்தல் நடத்தி இந்த அளவுக்கு பேசு பொருளாகி தேர்தல் நடந்தது இல்லை. நான் காம்பரமைஸ் பேசி யாராவது ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்றதும் எடுபடவில்லை, கேட்கவில்லை. ஊரையே இரண்டு படுத்தி எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இப்படி நடந்த தேர்தலுக்கு என்னுடைய எதிர்பை காட்டுவதற்காக என்னை தாழ்த்தி கொண்டு இதை செய்தேன். நான் வெளியில் வந்து ஓட்டு போட்ட சீட்டை காட்டி நடுநிலையான ஆள் என்பதை காட்டினேன். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தேர்தலில் தலையிடாமல் இருந்து நடுநிலையாக இருந்தார்" என்றார்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை ஏன் இல்லை...? - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன விளக்கம்!

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு!தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் அழகு மீனா ஆகியோர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கருத்தரங்கு நடைபெற உள்ள மேடையை பார்வையிட்டனர். பின்னர் அமை... மேலும் பார்க்க

``கேரளா அரசுக்கு வாழ்த்துகள்.." ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்ற கவர்னர் ஆரிப் முஹம்மதுகான்!

கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் இன்று ராஜ்பவ... மேலும் பார்க்க

பாமக: `எங்களுக்கு எல்லாமே ஐயாதான்.. இது உள்கட்சிப் பிரச்னை!’ – ராமதாஸை சந்தித்தபின் அன்புமணி பேட்டி

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ந... மேலும் பார்க்க

உள்கட்சி பூசல்; இருதரப்பு மோதல்... வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி..!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப... மேலும் பார்க்க

Modi: ``தமிழ் குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்" - பிரதமர் பேசியதென்ன?

இன்றைய (29.12.2024) மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி கற்கும் திட்டம் தொடங்கியிருப்பது குறித்து பேசிய பிரதமர், தமிழ் மொழி கு... மேலும் பார்க்க

கூடலூர்: பட்டியைத் திறந்த விவசாயி, கொத்து கொத்தாக செத்துக் கிடந்த ஆடுகள்! குழப்பத்தில் வனத்துறை...

வனங்கள் நிறைந்த நீலகிரியில் தொடரும் காடழிப்பு, வனவிலங்குகளின் வாழிட ஆக்கிரமிப்பு, வளர்ச்சி பணிகள், அந்நிய களை தாவரங்களின் பெருக்கம் போன்ற பல காரணங்களால் வனவிலங்குகள் நேரடியான பாதிப்புகளை எதிர்கொண்டு வ... மேலும் பார்க்க