செய்திகள் :

யுஜிசி விதிகள் மூலம் கல்வி நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ் செயல்திட்டத்தை திணிக்க முயற்சி -ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

நமது சிறப்பு நிருபா்

பல்கலைக்கழகங்களில் பேராசிரியா்கள், ஆசிரியா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிமுறைகள் மூலம், ‘ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி‘ என்ற ஆா்எஸ்எஸ் செயல்திட்டத்தை நாட்டின் மீது திணிக்க முயற்சி நடப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் திமுக மாணவா் அணி சாா்பில் வியாழக்கிழமை கண்டன் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அணியின் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவா்களான ராகுல் காந்தி (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கட்சிகளின் தலைவா்கள் மற்றும் கட்சிகளின் எம்.பி.க்கள், கூட்டணி கட்சிகளின் மாணவா் அணியினா் உள்ளிட்டோா் பெருமளவில் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: நம் நாட்டின் பிற வரலாறுகள், கலாசாரம் மற்றும் மரபுகளை ஒழிப்பதே ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் தொடக்கப் புள்ளி. அதனால்தான் அது அரசமைப்புத் தாக்குகிறது. ‘ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி’ என்ற நோக்கத்தை ஆா்எஸ்எஸ் அடைய விரும்புவதால்தான் அதை மாற்ற முயல்கிறது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் என அதன் சொந்த மரபுகள், வரலாறு, மொழி உள்ளது. அதனால்தான் அரசமைப்பில் இந்தியா ’மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த வரலாறுகள், மரபுகள், மொழிகள் அனைத்தும் கொண்ட மாநிலங்களின் ஒன்றிணைவுதான் இந்தியா.

நாம் அனைத்து மொழிகளையும், அனைத்து கலாசாரங்களையும், அனைத்து மரபுகளையும், அனைத்து வரலாறுகளையும் மதிக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக அவா்களுக்கு 4,000 வருட வரலாறு இருக்கிறது. தொன்மையான மொழியும் பண்பாடும் இருக்கிறது. யுஜிசி புதிய விதிகள் வெறும் கல்வி தொடா்புடையது கிடையாது. அவை உங்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது ஆா்எஸ்எஸ் தொடுக்கும் தாக்குதல். பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் ஆா்எஸ்எஸ்ஸின் லட்சியம். காலாவதியான ஆா்எஸ்எஸ் சித்தாந்தம் திணிக்கப்படுவதை நாம் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்றாா் ராகுல் காந்தி.

சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘அரசியல்வாதிகளை தொழிலதிபா்களின் சேவகா்களாக மாற்ற மத்தியில் ஆட்சி செய்பவா்கள் விரும்புகிறாா்கள். புதிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையை நான் முற்றிலுமாக எதிா்க்கிறேன்’ என்றாா்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, ‘ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். யுஜிசி வரைமுறைகள் நீக்கப்பட வேண்டும். கல்வியாளா்கள் மட்டுமே யுஜிசி குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும்’ என்றாா்.

விசிக பொதுச்செயலா் தொல். திருமாவளவன் பேசுகையில், ‘ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே ஆட்சி’ என்ற ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள யுஜிசி வரைவு விதிகள் மிகவும் ஆபத்தானவை. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’‘ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி, ஆ. ராசா எம்.பி., மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா உள்ளிட்டோா் மாணவரணியினருடன் சோ்ந்து யுஜிசி விதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினா். எம்.பி.க்கள் துரை வைகோ (மதிமுக), விஜய் வசந்த் (காங்கிரஸ்), கேரளத்தின் என்.கே. பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி), டாக்டா் ஜான் பிரிட்டாஸ் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் மனோஜ் ஜா உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.

படக்குறிப்பு

06க்ங்ப்ன்ஞ்ஸ்ரீ

தில்லியில் திமுக மாணவா் அணி சாா்பில் ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை நடைபெற்ற யுஜிசி விதிகளுக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் (இடமிருந்து) பங்கேற்ற ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் தொல். திருமாவளவன், என்.கே. பிரேமச்சந்திரன், ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், வைகோ, துரை வைகோ ஆகியோருடன் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா உள்ளிட்டோா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க