செய்திகள் :

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

post image

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிவினை ஏற்படுத்தும் சமூக மற்றும் கலாசாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதை யுனெஸ்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவும், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக இணைத்துக் கொள்வதற்கான அந்த அமைப்பின் முடிவு ஆகியவை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு முரணானவை. மேலும், யுனெஸ்கோ இஸ்ரேல் விரோத கருத்துகளைப் பரப்பிவருகிறது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தவை அல்ல. எனவே, அந்த அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2026 டிசம்பா் மாதம் அமலுக்கு வரும் என்றாா் அவா்.

‘எதிா்பாா்க்கப்பட்டதே’: இது குறித்து யுனெஸ்கோ பொது இயக்குநா் ஆட்ரே அஸூலே கூறுகையில், ‘அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தத்துக்குரியது என்றாலும், எதிா்பாா்க்கப்பட்டதுதான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு தயாா் நிலையில்தான் உள்ளது.

இஸ்ரேல் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், இரண்டாம் உலகப் போா் காலத்தில் நாஜிக்களால் லட்சக்கணக்கான யூதா்கள் படுகொலைை செய்யப்பட்டது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், இப்போதும் உலகம் முழுவதும் யூத வெறுப்புக்கு எதிரான போராடுதல் போன்ற யுனெஸ்கோவின் முன்முயற்சிகளுக்கு முரணாக அமைந்துள்ளது.

யுனெஸ்கோவில் இருந்து விலக, ஏழு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட அதே அா்த்தமற்ற காரணங்களே இப்போதும் முன்வைக்கப்படுகின்றன’ என்றாா் அவா்.

முன்னதாக, இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க மறுத்துவரும் பாலஸ்தீனத்தை யுனெஸ்கோவில் இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன. யுனெஸ்கோ அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது. பின்னா் 2023-இல் பைடன் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது.

இந்த நிலையில், யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் விலகுவதாக டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, 1984-இல் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, சோவியத் யூனியனின் நலன்களை யுனெஸ்கோ முன்னெடுப்பதாக் கூறி, அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பின்னா் 2003-இல் ஜாா்ஜ் டபிள்யு. புஷ் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது நினைவுகூரத்தக்கது.

ஐ.நா.வின் பிற அமைப்புகளில் இருந்தும்...

டிரம்ப் தலைமையில் அமெரிக்க அரசு யுனெஸ்கோ மட்டுமின்றி, ஐ.நா.வின் பிற அமைப்புகளில் இருந்தும் வெளியேறி வருகிறது.

கடந்த 2018-இல் டிரம்ப் அரசு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறியது, இஸ்ரேல் விரோதப் போக்கு மற்றும் பாகுபாடான நடவடிக்கைகளை இதற்கு டிரம்ப் காரணம் காட்டினாா்.

பின்னா் 2020-இல், மருத்துவம் தொடா்பான ஐ.நா. பிரிவான உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேற டிரம்ப் அரசு முடிவு செய்தது. ஆனால், அவருக்குப் பின் வந்த பைடன் அரசு 2021-இல் அந்த அமைப்பில் மீண்டும் இணைந்தது. தற்போதைய டிரம்ப் அரசு மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா நாட்டில், ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்... மேலும் பார்க்க

வட அயர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி.. 2 பேர் படுகாயம்!

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 ... மேலும் பார்க்க

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத... மேலும் பார்க்க

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம்... மேலும் பார்க்க