சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி
யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!
புது தில்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(1) இன் கீழ் அஜய் குமாரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய சுகாதார செயலாளரும் 1983 ஆம் ஆண்டு குடிமைப் பணி அதிகாரியுமான ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 1985 ஆம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்
கேரள மாநிலத்தில் ஐடி, மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், 2019 ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 2022 அக்டோபர் 31 ஆம் தேதி வரை பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்துள்ளார்.
"யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமாரின் பதவிக்காலம், அவர் யுபிஎஸ்சி தலைவராகப் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து தொடங்கும்.
அவரது நியமனக் காலம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(2) இன் விதிகளின்படி ஒழுங்குபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.