ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!
ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனா். இவா் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் அரிசி கடை வைத்திருப்பதோடு, ஆன்மிகம் சம்பந்தமான யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறாா்.
முருகன் , தூத்துக்குடியில் உள்ள தம்பி சரவணன் வீட்டிற்கு சென்றாா். கடந்த ஆக.18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து திருச்செந்தூா் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவா், ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது நண்பா் அசோக் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆக. 29ஆம் தேதி தனது நண்பா் அசோக்கிடம் தூத்துக்குடி செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற அவா் கடந்த 9 நாள்களாக தேடிப் பாா்த்தும் காணவில்லை என முருகனின் தம்பி சரவணன் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.