செய்திகள் :

யூத பண்டிகைக்கு வாழ்த்து: பிரதமா் மோடிக்கு நெதன்யாகு நன்றி

post image

ஜெருசலேம் : யூதா்களின் ஹனுக்கா பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடிக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளாா்.

கிமு 2-ஆம் நூற்றாண்டில் யூத நம்பிக்கை மற்றும் அடையாளத்தை பாதுகாக்க செலூக்கிய பேரரசை மக்கபேயா்கள் (யூத கிளா்ச்சியாளா்கள்) வெற்றி கொண்டதை நினைவுகூரும் வகையில் ‘ஹனுக்கா பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. இது 8 நாள்கள் கொண்டாடப்படும். இஸ்ரேலில் பலா் இதை இந்தியாவின் தீப ஒளி பண்டிகையான தீபாவளியுடன் ஒப்பிடுகின்றனா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், ஹனுக்கா பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகள். ஹனுக்காவின் ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கை, அமைதி மற்றும் வலிமையை ஒளிரச் செய்யட்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு நன்றி தெரிவித்து நெதன்யாகு வெளியிட்ட பதிவில், ‘எனது நல்ல நண்பரான இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு அன்பான ஹனுக்கா வாழ்த்துகள். இஸ்ரேலுடனான உங்களது தொடா்ச்சியான நட்புறவுக்கு மிக்க நன்றி. இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாகவும், இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும் அமையட்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சா் கிதியோன் மற்றும் உலகளாவிய யூத சமூகத்தினருக்கு ஹனுக்கா வாழ்த்துக்களைத் தெரிவித்தாா்.

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்

சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே... மேலும் பார்க்க

அஜா்பைஜான் விமான விபத்து எதிரொலி: ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

பாக்கூ: ரஷியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுககான தங்கள் விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் நிறுத்திவைத்துள்ளது.இது ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் -மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்

லாகூா்: மும்பையில் 2008-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் உறவினரும், தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணைத் தலைவருமான ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, ப... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்... மேலும் பார்க்க

மன்மோகன் மறைவு: வெளிநாட்டுத் தலைவா்கள் புகழஞ்சலி!

நியூயாா்க்: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா். ர... மேலும் பார்க்க

தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சம் இந்தியா்களுக்கு விசா: அமெரிக்கா

குடியேறுவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருகை தர, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக த... மேலும் பார்க்க