AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக...
யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்
யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், விபத்துப் பகுதியில் இருந்து 12 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.முன்னதாக, எத்தியோப்பியாவிலிருந்து அரபு வளைகுடா நாடுகளை நோக்கி 154 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்தப் படகு, ஷுக்ரா பகுதிக்கு அருகே கவிழந்ததில் 68 போ் உயிரிழந்தனா்;
74 போ் மாயமாகினா்; 12 போ் மீட்கப்பட்டனா் என்று ஐஓஎம் அமைப்பு கூறியிருந்தது.