செய்திகள் :

ரஜினியிடம் கதை சொன்ன நித்திலன்!

post image

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் நடிகர் ரஜினிக்கு கதை சொன்னதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி - நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகளவில் கவனம்பெற்றதுடன் ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நித்திலன் மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நித்திலன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளாராம். இது ரஜினிக்கு பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தக் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க: ஜீவா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்!

actor rajinikanth hear and enjoyed director nithilan swaminathan next movie story

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ஐஓசி, ரயில்வே வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ஆயில... மேலும் பார்க்க

டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு - புகைப்படங்கள்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் டெஸ்லா ஒய் (Y) மாடல்.தனது பிரபலமான ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறி... மேலும் பார்க்க

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது. பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. செல்ஸி ... மேலும் பார்க்க

விண்வெளியிலிருந்து தரையிறங்கிய டிராகன் விண்கலம் - புகைப்படங்கள்

வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா.அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து லக்னோவில் கொண்டாடி மகிழந்த சுபான்ஷு சுக்லா கு... மேலும் பார்க்க