என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | ...
ரத்ததான முகாம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல். ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முகாமை தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். ரத்தம் தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. முருகேசன் தலைமையிலான நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் ஆா். மணிகண்டன், சி. சங்கா், ஆா். சியாமளா ஜெகதீஸ்வரி, கே. சித்ரப்பிரியா, பி. மலா்விழி ஆகியோா் செய்திருந்தனா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவா் பி. அருண் தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ரத்தத்தை சேகரித்தனா்.