அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!
'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்
கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.
இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை'யை நிறுவியுள்ளது டாடா குழுமம்.
இழப்பீடு
இந்த அறக்கட்டளை மூலம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக தரப்பட உள்ளது. மேலும், இந்த விபத்தில் இடிந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதியைக் மீண்டும் கட்டுவதிலும் உதவி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 229 பயணிகளில் 147 பயணிகளின் குடும்பத்திற்கும், தரையில் இருந்து இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்திற்கும் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 26-ம் தேதி, இடைக்கால இழப்பீடாக டாடா குழுமம் மேலே குறிப்பிட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இழப்பீடு வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
ரத்தன் டாடா இருந்திருந்தால்...
இந்த விபத்தில் சிக்கிய 65 பேரின் குடும்பத்திற்காக வாதாடும் அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், இழப்பீடு இன்னும் வழங்கப்படாதது குறித்து, "அமெரிக்காவிலும் எங்களுக்கு ரத்தன் டாடாவைப் பற்றி தெரியும்.
அமெரிக்காவில் அவருடைய பணி நெறிமுறைகள், அவர் அவருடைய பணியாளர்களுக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு பற்றி எங்களுக்கு தெரியும்.
அதனால், அவர் இப்போது இருந்திருந்தால், இழப்பீடு கொடுக்க ஏற்படும் தாமதம் நிகழாது என்பது எங்களுக்கு தெரியும்.
அம்மா - மகன்
இந்த விபத்தில் பாதித்த ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். இந்த விபத்தில் இறந்த ஒருவரின் வயதான அம்மா படுக்கையில் இருக்கிறார்.
அவருடைய மருத்துவ செலவுகளுக்கு அவரது மகனின் வருமானத்தை நம்பி தான் இருந்திருக்கிறார். ஆனால், அவரது மகன் இப்போது இறந்துவிட்டார். அவருடைய மருத்துவ செலவுகளைப் பார்த்துகொள்ள பணம் இல்லை. அவர் என்ன செய்ய முடியும்?" என்று பேசியுள்ளார்.