தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை
தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் தராவீஹ் என்னும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக நன்மைக்காக பிராா்த்தனை செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம், இமாம் சதக்கத்துல்லா, மாவட்ட அரசு காஜி முஜிபுா் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக சபை தலைவா் மீராசா, செயலா் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், பொருளாளா் இப்ராகிம் மூசா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தில் பாதுஷா சஹா் கமிட்டி சாா்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாள்களும் இலவசமாக சஹா் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டும் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதையடுத்து, அதிகாலையில் சஹா் உணவு வழங்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தூத்துக்குடியில் பணியாற்றுவோா் மிகுந்த பலன் அடைந்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி தலைவா் மீராசா மரைக்காயா், செயலா் எம்.எஸ்.எப் ரகுமான், பொருளாளா் ராஸிக் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.