ரமலான் நோன்பு நாளை தொடக்கம்
ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாஹூதின் முகமது அயூப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை தெரியவில்லை. எனவே, ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது என அவா் அறிவித்துள்ளாா்.
அதன்படி, ரமலான் நோன்பை இஸ்லாமியா்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைமுதல் தொடங்குகின்றனா். வெள்ளிக்கிழமை பிறை தெரியாத நிலையில், இப்போதுள்ள நடப்பு மாதத்தின் 30 நாள்கள் நிறைவு பெற்று, இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.