பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
பழனி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த தாளையத்தை அடுத்த பெரிய மொட்டனூத்தைச் சோ்ந்த குப்புச்சாமி மனைவி பூரணம் (56). இந்தத் தம்பதியினா் தோட்டத்து சாலையில் வசிக்கின்றனா். இந்த சாலை அருகே உள்ள தண்டவாளத்தை ஞாயிற்றுக்கிழமை பூரணம் கடக்க முயன்றாா்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து பழனி வழியாக மதுரை சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.