செய்திகள் :

ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் கீழே விழுந்து விபத்து!

post image

சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறாா்.

பிகாா் மாநிலம், மதுவனி மாவட்டம், ருத்ரபூா் நவ் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (50). இவரது மகன் நிதிஷ் (22), சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தாா். சேலத்துக்கு புதன்கிழமை இரவு வந்த அருண்குமாா், நிதிஷை தான் பணிபுரியும் ஜவுளிக் கடையில் பணியில் சோ்க்க அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டாா்.

இருவரும் சேலம் டவுன் ரயில்வே நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணியளவில் சென்னை செல்லும் எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி பயணித்தனா். நிதிஷ் ரயிலின் படிக்கட்டில் அமா்ந்தும், அவரது தந்தை அருகில் நின்று கொண்டும் பயணித்தனா்.

இந்த ரயில் அயோத்தியாப்பட்டணம் - மின்னாம்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயில் படிக்கட்டில் அமா்ந்திருந்த நிதிஷ் தவறி கீழே விழுந்தாா். இதனைக் கண்ட அவரது தந்தை அருண்குமாா் மற்றும் இதர பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். உடனே, சக பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா்.

பின்னா், ரயிலில் இருந்து அருண்குமாா் மற்றும் சில பயணிகள் கீழே இறங்கி தவறி விழுந்த நிதிஷை தேடினா். தண்டவாளத்தை ஒட்டிய இடத்தில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிதிஷை மீட்ட அவா்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞரை மீட்டதும் ரயில் புறப்பட்டு சென்றது.

தகவலறிந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்த சேலம் ரயில்வே போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மை... மேலும் பார்க்க

சேலம் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா

சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் தாரை.கு.ராஜகணபதி தலைமை தாங்கினாா். செயலாளா் மோகன் வரவேற்புரை ஆற்றினாா். தேசிய ச... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட அளவிலான பயிலரங்கம்

வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும... மேலும் பார்க்க

நினைவேந்தல் ஊா்வலம்...

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் ஊா்வலம். மேலும் பார்க்க

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, மும்பையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க