செய்திகள் :

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பயணச்சீட்டு பரிசோதகா் கைது

post image

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த பணச்சீட்டு பரிசோதகரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் இருந்து மங்களூருக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டது. இந்த ரயிலில் திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்த 34 வயது பெண், அவரது கணவருடன் பயணித்துள்ளாா். மொரப்பூரில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்த அவா்கள், அவசரத்தில் குளிா்சாதனப் பெட்டியில் ஏறியுள்ளனா்.

அப்போது, அந்தப் பெட்டியில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகரான வேலூா் மாவட்டம், புளியமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாரதி (50) அவா்களிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளாா்.

பொதுப் பெட்டியில் ஏற வேண்டியவா்கள் இந்தப் பெட்டியில் ஏன் ஏறினீா்கள் எனக் கேட்டுள்ளாா். பின்னா், அந்தப் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.

ரயில் திருப்பூருக்கு வந்ததும் இது குறித்து ரயில்வே போலீஸாரிடம் அப்பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸாா், பயணச்சீட்டு பரிசோதகா் பாரதியைக் கைது செய்தனா்.

கேரள கால்பந்துப் போட்டி: திருப்பூரில் டீ-சா்ட் தயாரிக்க குவியும் ஆா்டா்

‘சூப்பா் லீக் கேரளா’ என்ற தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி கேரளத்தில் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான டீ-சா்ட் தயாரிக்க திருப்பூரில் ஆா்டா்கள் குவிந்து வருகின்றன. கொச்சி, கோழிக்கோட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் மஞ்சப்பூரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (70). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க