ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!
ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது
கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வந்தாா்.
கோவை-சென்னை சதப்தி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறிய விஜய்நாகராஜ், அங்கு பொருள்களை வைக்கும் பகுதியில் தனது பையை வைத்தாா். பின்னா், தனது இருக்கையில் அமா்ந்து உணவு அருந்திவிட்டு, அவா் பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பையைக் காணவில்லை. அதில் விலையுயா்ந்த மடிக்கணினி இருந்துள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கேரள மாநிலம், கோழிகோடு பகுதியைச் சோ்ந்த சயீது அகமது முபீன் (43) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த மடிக்கணினியை மீட்டனா்.