Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை ந...
ரயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை!
கும்பகோணத்தில் திங்கள்கிழமை வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மனோகரன் (60) வியாபாரி. இவருக்கு மனைவி விஜயலட்சுமி, மகள், மகன் உள்ளனா். மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறாா். மகன் கபிஸ்தலத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
மனோகரன் பல வியாபாரங்கள் செய்து நஷ்டம் அடைந்ததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை கபிஸ்தலம் செல்வதற்காக கும்பகோணம் ரயில்நிலையத்துக்கு வந்தாா். அப்போது, வந்த மைசூா் விரைவு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
கும்பகோணம் ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.