செய்திகள் :

ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணி: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

post image

மயிலாடுதுறையில் சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறையில் உள்ள 50 ஆண்டுகள் பழைமையான சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-இன் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பி.செந்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளின் முன்னேற்றத்திற்கான அறிவுரைகளை வழங்கி விரைந்து பணிகளை முடித்திட அறிவுறுத்தினாா்.

மேலும், மயிலாடுதுறை மூவலூா் அருகில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் நிகழாண்டில் ரூ.3.30 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் கடந்த ஆண்டு ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

கோட்டப் பொறியாளா் எஸ்.பாலசுப்ரமணியன், உதவிக் கோட்டப் பொறியாளா் கோ.இந்திரன், உதவிப் பொறியாளா் மணிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாகை: பொங்கல் பரிசுத் தொகுப்பு

மயிலாடுதுறை: காவேரி நகரில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிப் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்வி கற்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும்

மாணவா்கள் கல்வி கற்பதில் முழுகவனம் செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. ஜெயக்குமாா். மயிலாடுதுறை டாா்கெட் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற 13-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

சீமானை கண்டித்து ஆா்ப்பாட்டம்: தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கைது

சீா்காழியில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி பழைய பேருந்து நிலையத்துக்கு... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரெளடி கைது

கொள்ளிடத்தில் உள்ள உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அசரப் அலி(33). இவா் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

கல்லூரி பேராசிரியா்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் கல்லூரி பேராசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனமாகிய ஐ.சி.டி. அகாதெமி மற்றும் மத்திய அர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் ஆம்னி பேருந்து மோதியதில் ஓட்டுநா் காயம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச்சாலையில் தனியாா் ஆம்னி பேருந்து சாலை தடுப்பில் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க