செய்திகள் :

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

கும்பகோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை ரயில்வே போலீஸாா் நடத்தினா்.

கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடையில் வழிதவறி வரும் சிறாா்களை பத்திரமாக மீட்டு ஒப்படைப்பது, முதியோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் சுஜாதா பேசினாா். ‘காவலன்’ செயலி பதிவிறக்கம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வ

ன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) சட்டம் குறித்தும் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்துப் பேசினாா். விழிப்புணா்வு நிகழ்வில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அருணாச்சலம், ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டயக் கணக்காளரை மிரட்டி ரூ. 1 கோடி பறிப்பு: காவல் ஆய்வாளா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டயக் கணக்காளரை மிரட்டி ரூ. 1 கோடி பறித்ததாகக் காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட குலசேகரந... மேலும் பார்க்க

தரமற்ற முறையில் நீா்த்தேக்கத் தொட்டி பழுது பாா்க்கும் பணி எனப் புகாா்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதுபாா்க்கும் பணிகளை தஞ்சை ஆட்சியா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோா் ஆய்வு செய்து நடவடிக்கை ... மேலும் பார்க்க

மது போதை தகராறு: இளைஞரை பாட்டிலால் குத்திய சிறுவன் கைது

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மது போதை தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் குத்திய 17 வயது சிறுவனை சேதுபாவாசத்திரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா். சேதுபா... மேலும் பார்க்க

விவசாயிக்கு அரிவாள் வெட்டு உறவினா்கள் போராட்டம்

ஒரத்தநாடு, ஏப். 4: ஒரத்தநாடு வட்டம், பாப்பநாட்டில் முன்விரோதத் தகராறில் விவசாயியை புதன்கிழமை இரவு மா்மகும்பல் அரிவாளால் வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏப்ரல் 6-இல் நுழைவுத் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் குரூப்-4 தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

அரசுக்குச் சொந்தமான 3 டன் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே குலசேகரநல்லூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தேக்குமரக்காட்டில் இருந்து புதன்கிழமை 3 டன் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்றவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகி... மேலும் பார்க்க