ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை
திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், ஊத்துக்குளி ரயில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும் எனக்கூறிய போலீஸாா், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].